கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் முதல் பிரிவில், ஐந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதில், அனைத்து வீடுகளும் முழுமையாக சேதமடைந்தது.

இன்று மாலை சுமார் 4 மணி அளவில், கடுமலை எஸ்டேட் பகுதி நான்கில், முனிசாமி என்பவர் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததது.

இதையடுத்து, அருகில் இருந்த கோவிந்தன், பால் முருகன், மாடசாமி என்ற நான்கு பேர் வீடுகளையும் தீப்பற்றி மளமளவென்று எரிந்தது.

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று இருந்ததால், உயிர் சேதம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.
தீயை அணைக்க பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வீட்டில் இருந்த டிவி, பீரோ துணிமணி, பள்ளி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் நகை என அனைத்தும் எரிந்து சாம்பலானதால், அவர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இந்த சம்பவம் குறித்து, வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.