கோவை: திருச்சியில் இருந்து தனி விமானம் மூலமாக 11. 45 மணி அளவில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று காலை திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு 11.45 மணி அளவில் வந்தார். அங்கு திமுகவினர் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம், கவுண்டம்பாளையம் வேட்பாளர் பையா கிருஷ்ணன், திமுக எம்.எல்.ஏ, கார்த்திக் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஸ்டாலினுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கோவையிலிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் பிரச்சாரத்துக்கு செல்லும் திமுக தலைவர் ஸ்டாலின், அங்கிருந்து மாலை மீண்டும் கோவைக்கு வந்து, கோவை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.