கோவை: கோவை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் நேற்று பணியின்போது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சுப்பையா (59), இவர் கடந்த சில நாட்களாக ரத்த புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சைக்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு தொடர்ந்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர். தமிழக அரசு கொண்டு வந்த கூடுதல் வயது வரம்பு நீட்டிப்பு அடிப்படையில் இவர் 59 வயது ஆகி பணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் கமிஷனர் உட்பட உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.