கோவை டவுன்ஹால்‌ பகுதியில்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட டவுன்ஹால்‌ பகுதியில்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட டவுன்ஹால்‌ பகுதியில்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ டவுன்ஹால்‌ பெரிய கடை வீதி பகுதியில்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையர் அவர்கள்‌, முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த தனியார்‌ பேருந்து ஓட்டுநர் மற்றும்‌ நடத்துநர் ஆகியோருக்கு தலா ரூ.200/- அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.



பேருந்து நிறுத்த பகுதியில்‌ இருந்த பொதுமக்களிடம்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌ என அறிவுரை வழங்கிய பின்னர்‌, அப்பகுதியில்‌ இருந்த சாலையோரக்‌ கடைகளின்‌ முன்பு குப்பைகள்‌ இருந்ததை பார்வையிட்டார்.



மேலும், கடை உரிமையாளரிடம்‌ குப்பைகளை குப்பைத்‌ தொட்டிகளில்‌ மட்டுமே போட வேண்டும்‌ எனவும் சாலையோரங்களில்‌ போடக்‌ கூடாது என அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்‌ போது நகர்‌ நல அலுவலர்‌ மரு.ராஜா, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...