கோவை: கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி, 100 வது வார்டு மேட்டூர் பகுதியில், மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்ட திமுகவினர் பிரச்சாரம் வேலைகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக, அப்பகுதியில் "ஸ்டாலின் தான் வராறு, விடியலை தரப்போறாறு" என்ற பாடலுடன் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகினர். இந்த நிலையில், அப்பகுதி அதிமுக வார்டு செயலாளர் வேணுகோபால் அதிமுகவினருடன் வந்து அதிமுக கொடியை பிடித்துக்கொண்டு தேவையில்லாத பிரச்சினையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும், திமுக அலுவலகம் முன்பு அமர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் அராஜகத்தில் ஈடுபட்டதாக, அதிமுகவினர் மீது திமுக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அதிமுகவினரை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனாலும், அதிமுகவினர், காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அங்கு திமுகவினர் அதிகளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் இடையே சில இடங்களில் இதுபோன்ற சலசலப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.