வால்பாறை: ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியிலும் அவர்களின் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட விழா நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. இன்று காலை ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார், சிபிஐ வேட்பாளர், ஆறுமுகம். அதன் தொடர்ச்சியாக, வால்பாறையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது
இக்கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, திமுக பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை "கதிர் அரிவாள்" சின்னத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

"வால்பாறையை சுற்றுலா தலமாக மாற்றவும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படுத்தித்தர, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர் அறிவால் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு", வேட்பாளர் அறிமுகம் தெரிவித்தார்.