கோவை: "அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை "பொய்" என்று நிரூபித்தால், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பு மனுவை திரும்பப் பெற வேண்டும்", என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார்.
குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் பொய் என நிரூபித்தால் வேட்புமனுவை, திமுக வேட்பாளர் திரும்ப பெற்றுக் கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் - அதிமுக பதிலடி.
கோவை: "அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை "பொய்" என்று நிரூபித்தால், திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பு மனுவை திரும்பப் பெற வேண்டும்", என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கல்யாணசுந்தரம், தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான கார்த்திகேய சிவசேனாபதி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார் என்று குற்றம்சாட்டினார்.
பொய் என நிரூபித்தால், ஊரை விட்டு செல்ல தயாரா..?
மேலும், தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நேரடியாக மேடையில் விவாதிக்க வருமாறு கார்த்திகேய சிவசேனாபதிக்கு தான் சவால் விடுவதாக அவர் தெரிவித்தார். அவரது, குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் பொய் என நிரூபித்தால் வேட்புமனுவை, திமுக வேட்பாளர் திரும்ப பெற்றுக் கொண்டு அவரது சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும், என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஆள் இல்லாததால் வெளியூர் வேட்பாளர்..!
"கோவையை சேர்ந்த யாரும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட முன்வராததால், வெளியூரிலிருந்து கார்த்திகேய சிவசேனாபதியை களம் இறக்கியுள்ளார், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின்", என்று தெரிவித்தார்.
சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் போதே, நேரடியான விவாதத்திற்கு பலமுறை அழைப்பு விடுத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விவாதத்தை ஏற்று முன்வரவில்லை என்றும் பின்னர் விவாதிக்க தயாரா..? என்று கேள்விகள் மட்டுமே எழுப்பிக்கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த மீது உள்ள குற்றச்சாட்டை பற்றியும் விவாதிக்க தயாரா..?
இந்நிலையில், சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த மீது உள்ள குற்றச்சாட்டை பற்றியும் கார்த்திகேய சிவசேனாபதி விவாதிக்க தயாரா என்று கல்யாணசுந்தரமள் கேள்வி எழுப்பினார்.
தண்ணீரை யாரும் தனியார் மயமாகவில்லை..!
குடிநீர் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற பொய் குற்றச்சாட்டை தொடர்ந்து கார்த்திகேய சிவசேனாபதி முன்வைத்து வருவதாகவும், உண்மையில் குடிநீர் விநியோகத்தை நவீன தொழில்நுட்பங்களின் வசதியோடு கண்காணிக்கும் பணியை மட்டுமே தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்துள்ளதாகவும், குடிநீர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக, தெரிவித்தார். மேலும், இது போன்ற ஆதரமற்ற, பொய் குற்றச்சாட்டுக்களை திமுகவினர் மக்களிடையே பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று கல்யாணசுந்தரம் சாடினார்.