தொடர் தோல்வியை கண்டு துவண்டு விடாமல் 36வது முறையாக தேர்தலை சந்திக்கும் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது..!

கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட காய்கறி மாலை, மண்வெட்டி, மண் அடுப்புடன் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது வேட்பு மனு தாக்கல் செய்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட காய்கறி மாலை, மண்வெட்டி, மண் அடுப்புடன் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளர் நூர் முகமது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நூர் முகமது (63). ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் சுயதொழில் செய்து வருகிறார். கடந்த 1996ம் ஆண்டு முதல் வார்டு கவுன்சிலர், எம் எல் ஏ, எம்.பி என இதுவரை 35 தடவை தேர்தலில் நின்று குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.

ஆண்டிப்பட்டு, சாத்தான் குளம், திருச்செந்தூர், மதுரை மேற்கு, பென்னாகரம், ஆர் கே நகர், திருமங்கலம் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.



இந்த நிலையில், தற்போது 36வது முறையாக கோவை கிணத்துக்கடவு தொகுதி சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்ப மனுவை அளிக்க காய்கறி மாலையுடனும், மண்வெட்டி, மண் அடுப்பு கருவேப்பிலை கொத்துமல்லியுடன் வந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ள பகுதிக்கு வந்ததும் காவல் துறையினர் காய்கறி மாலை, மண்வெட்டி, மண் அடுப்பை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அம்சவேணியிடம் தனது விருப்ப மனுவை நூர் முகமது வழங்கினார்.

விவசாயிகள் டெல்லியில் போராடிய போது இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை எனவும், கேஸ் விலையேற்றத்தைக் கண்டித்தும், இந்த தோற்றத்தில் வந்ததாக தெரிவித்தார்.



தொடர்ந்து தோற்றாலும் மக்களிடம் மாற்றத்தை கொண்டு வருவதற்காக போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். வெற்றி, தோல்வி என்பதை தனக்கு பிரச்சாரம் செய்ய ஆளில்லை என்ற போதும், ஒவ்வொரு தேர்தலிலும், முகம் தெரியாத மக்கள் தனக்கு ஆதரவளித்து வருவதாக குறிப்பிட்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...