கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்‌ விதிப்பு - மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்புப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்புப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌, காந்திபுரம்‌, கிராஸ்கட்‌ ரோடு, 10வது வீதி, டாடாபாத்‌, 9, 10 மற்றும்‌ 11வது வீதிகள்‌, 100 அடி சாலை ஆகிய பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு பணிகளில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அவர்கள்‌, அப்பகுதிகளில்‌ உள்ள வணிக வளாகங்கள்‌, உணவகங்கள்‌, பேக்கரிகள்‌, ஜவுளிக்கடைகள்‌, சாலையோரக்கடைகள்‌ ஆகிய கடைகளில்‌ பணிபுரிபவர்கள்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், காந்திபுரம்‌, கிராஸ்கட்‌ ரோட்டில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ கட்டுமான தொழிலாளர்கள்‌ பணியில்‌ ஈடுபட்டதால்‌ அதன்‌ நிறுவன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம்‌ அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து 100 அடி சாலையில்‌ உள்ள தனியார்‌ கம்பெனியில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த 4 நபர்களுக்கு மொத்தம்‌ ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டது.

மேலும்‌, முகக்கவசம்‌ அணியாமல்‌ வாகனங்களில்‌ செல்வோர்களிடம்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டுமென அறிவுறுத்திய ஆணையாளர்‌ அவர்கள்‌, கொரோனா நோய்‌ தொற்றின்‌ தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளி மற்றும்‌ சுகாதார வழிமுறைகளை தவறாமல்‌ பின்பற்றி நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்‌ போது மத்திய மண்டல செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, உதவி பொறியாளர்‌ ஏஞ்சலினா, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...