கோவை: வருகின்ற 6 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை - கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பையா (எ) ஆர் கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அவர், கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழில் துறையினரை சந்தித்து வருகிறார். குறிப்பாக, கவுண்டம்பாளையம் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை வெற்றி பெற்றவுடன் உடனடியாக தீர்க்க முற்படுவேன், என்று உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், வேட்பாளர் அறிமுக கூட்டமானது சர்க்கார் சாமக்குளம் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட, குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம் கட்சியின் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தி.மு.க வின் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள், சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொகுதி பொறுப்பாளர் பி.வி.மணி, மாநில பொதுச் செயலாளர்கள், கொ.ம.தே.க வின் மாவட்டச் செயலாளர் குழந்தைவேலு, கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்டச் செயலாளர் பார்த்திபன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுசி கலையரசன், சமூக நீதி கட்சியின் பொதுச்செயலாளர் நாகராஜ் மற்றும் பகுதி கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.