கோவையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில் இதுவரை 25 பேருக்கு ரூ.36 லட்சம் திருப்பி ஒப்படைப்பு!

கோவை: கோவையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில் இதுவரை 25 பேருக்கு ரூ.36 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.


கோவை: கோவையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தில் இதுவரை 25 பேருக்கு ரூ.36 லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள் வீதம் மொத்தம் 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும்படையினர் அவ்வப்போது வாகன சோதனை நடத்தி பணம் மற்றும் பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்ற 68 பேரிடம் இருந்து ரூ.85 லட்சத்து 3 ஆயிரத்து 520 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டு மதுவகைகள் உள்பட 5,917 மதுப்பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 25 பேர் தாங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்களை கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து, அவர்களுக்கு ரூ.36 லட்சத்து 19 ஆயிரத்து 860 திருப்பி கொடுக்கப்பட்டது. மீதி பணம் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...