தா.மா.க துணைத் தலைவர் கோவை தங்கத்தின் ஆதரவாளர்கள் நீக்கம்!

கோவை: தா.மா.க துணைத் தலைவர் கோவை தங்கம் அக்கட்சியில் இருந்து நேற்று விலகியதால் அவர் ஆதரவாளரும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட தலைவருமான ரவிச்சந்திரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


கோவை: தா.மா.க துணைத் தலைவர் கோவை தங்கம் அக்கட்சியில் இருந்து நேற்று விலகியதால் அவர் ஆதரவாளரும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட தலைவருமான ரவிச்சந்திரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் தனித் தொகுதியாக திரு.வி.க நகர் தொகுதி ஒதுக்கப்பட்ட அத்தொகுதியில் கோவை தங்கம் போட்டியிட தாமா.க தலைவர் வாசன் வலியுறுத்தினார்.

ஆனால், கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் போட்டியிட விரும்பினார். வால்பாறை மாவட்ட தமாகா நிர்வாகிகள் கூட்டத்தில் கோவை தங்கம் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனாலும், வால்பாறை தொகுதி அதிமுக விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. திரு.வி.க நகர் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் பெண் கவுன்சிலர் கல்யாணியை வாசன் அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவை தங்கம் தா.மா.கவில் இருந்து விலகுவதாக அறிவித்ததால், அவருடைய ஆதரவு மாவட்ட தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் கோவை தங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து வாசன் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாநகர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ரவிச்சந்திரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மாவட்டத்திற்கு கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம் பொறுப்பாளராக செயல்படுவார் என கூறியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...