அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளாட்சித் துறையில் இந்த பொருட்களில் எல்லாம் ஊழல் செய்துள்ளார் - பொள்ளாச்சி திமுக எம்.பி சண்முகசுந்தரம் பட்டியல் வெளியிட்டு பேச்சு
கோவை: அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளாட்சித் துறையில் எந்தந்த பொருட்களில் ஊழல் செய்துள்ளார், என்ற ஊழல் பட்டியல் ஒன்றை பொள்ளாச்சி திமுக எம்.பி சண்முகசுந்தரம் வெளியிட்டு பேசினார்.
கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர், குறிச்சி பிரபாகரன் அறிமுக கூட்டம் மதுக்கரையில் இன்று நடைபெற்றதுஇந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், அமைச்சர் எஸ். பி வேலுமணி ஊழல் செய்த பொருட்களை மேடையில் காண்பித்து சாடினார்.

மேலும், அவர் பேசுகையில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறையில் எந்தெந்த பொருட்கள் அதிக விலைக்கு வாங்கிஊழல் செய்துள்ளார் என்பதை தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலை வெளியிட்டு பேசினார்

அப்போது, சந்தையில் 570 ரூபாய்க்கு விற்க்கும் தெருவிளக்கை, இரண்டாயிரத்து 80 ரூபாய்க்கும், 40 ரூபாய் விலையுள்ள கழிப்பறை சுத்தம் செய்யும் பிரஸ்சை 107 ரூபாய்க்கும், 1500 ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் மோட்டாரை 29 ஆயிரத்து 465 ரூபாய்க்கும், 125 ரூபாய் மதிப்புள்ள சீமாரை 325 ரூபாய்க்கும், 875 ரூபாய் மதிப்புள்ள எல்ஈடி விளக்கு 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கும் வாங்கி உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்திருப்பதாக பொருட்களைக் காட்டி பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குற்றம் சாட்டி பேசினார்.