கிணத்துக்கடவு தொகுதிக்கு எந்தப் பணிகளும் அதிமுக செய்யவில்லை - திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் குற்றச்சாட்டு

கிணத்துக்கடவு தொகுதிக்கு எந்தப் பணிகளும் அதிமுக செய்யவில்லை - திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் குற்றச்சாட்டு


கோவை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கிணத்துக்கடவு தொகுதிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மதுக்கரையில் இன்று மாலை நடைபெற்றது. 

கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 



இன்று நடைபெற்ற, வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர் கூட்டத்தில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு பேசியபோது, 

இரண்டு முறை குறிச்சி நகராட்சி தலைவராக இருந்தபோது மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து உள்ளேன். தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வர மக்கள் எழுச்சியாக உள்ளனர் என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கிணத்துக்கடவு தொகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து மக்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன், என்றும் உறுதியளித்து பேசினார்.



மேலும், பேசிய அவர் 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கிணத்துக்கடவு தொகுதி எந்த பணிகளும் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார் அதனால், அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசும் மாய பேச்சை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், அதிக வாக்கு வித்தியாசத்தில் கிணத்துக்கடவு தொகுதியில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அறிமுக கூட்டத்தில் தொண்டர்களிடையே குறிச்சி பிரபாகரன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...