காங்கேயம்: காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிஏபி பாசன விவசாயிகள் 21 பேர் இன்று ஒரே நாளில் மொத்தமாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
காங்கேயம்: காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியில் பிஏபி பாசன விவசாயிகள் 21 பேர் இன்று ஒரே நாளில் மொத்தமாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
பிஏபி பாசனத்தில் கடந்த பல ஆண்டுகளாக திருடப்பட்டு வரும் வெள்ளகோவில் பகுதி கிளை வாய்க்காலுக்கு உரிமையான நீரை வழங்க கோரி காங்கேயம் தொகுதியில் பிஏபி விவசாயிகள் சார்பில் ஆயிரம் பேர் போட்டியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி 21 விவசாயிகள் தங்களது வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
காங்கேயம் தொகுதியில் இதுவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் ஒருவரும், சுயேட்சை ஒருவரும் என இதுவரை 33 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிகம் பேர் வேட்பு மனுதாக்கல் செய்யும் பட்சத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிகமாக வைக்கப்படும் என்று தெரிகிறது.