கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக செ. தாமோதரன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இன்று அவர், மதுக்கரை தாலுக்கா வளாகத்திலுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அம்சவேணியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
செ.தாமோதரனின் வேட்புமனுவை கிணத்துகடவு எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், மதுக்கரை ஒன்றியச் செயலாளர் சண்முகராஜா மாநில அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் திருமலைசாமி உள்ளிட்ட நான்கு பேர் முன்மொழிந்தனர். செ.தாமோதரன் இதற்கு முன்பு 2001, 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2011ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அமைச்சரவையில் வேளாண்மை துறை அமைச்சராகவும் தாமோதரன் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.