நீலகிரி: குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது முக கவசம் அணியாமல் வந்த அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கப்பச்சி D.வினோத் குன்னூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது, அவருடன் வந்த அவரது ஆதரவாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தின் வெளியே நிறுத்தப்பட்டனர். இவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி இல்லாமலும் வந்ததையடுத்து நோய் தொற்று பரவ இருப்பதாக கூறி குன்னூர் தொகுதி தேர்தல் அதிகாரி லதா ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.