கோவை: தேர்தல் முடிந்ததும் கமல் சினிமாவில் நடிக்க சென்றுவிடுவார் என்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
கோவை: தேர்தல் முடிந்ததும் கமல் சினிமாவில் நடிக்க சென்றுவிடுவார் என்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக கோவை தொற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சைக்கிளில் வந்து கோவை மாநகர மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய சைக்கிள் வந்தாக கூறினார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கை சின்னத்தில் போட்டியிட களம் இறங்கியுள்ளேன் என்றார்.
பின்னர், மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போகக்குளை மக்களிடம் எடுத்துச் சென்று வரும் தேர்தலில் களம் காணவுள்ளோம். தான் பிறந்து வளர்ந்த தொகுதி எனவும், தெற்கு தொகுதி மக்களின் பிரச்சனைகளை நன்கு அறிந்த வேட்பாளர் தான் என்பதால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிந்ததும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய தொழிலான சினிமாவை கவனிக்க சென்னை சென்று விடுவார், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரான வானதி சீனிவாசன் அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணியின் தலைவியாக உள்ளதால் அவரும் கோவையில் இருந்து மக்கள் பிரச்சனைகளை கவனிக்க மாட்டார். மண்ணின் மைந்தனான நான் மட்டுமே இங்கிருந்து மக்களின் பிரச்சினைகளை கவனிப்பேன் என்பதால் மக்களை வாய்ப்பளிக்குமாறு கேட்கிறேன் என்றார்.
அரசாங்கம் மக்களுக்கு எதிரான போக்கினை கடைபிடித்த போதெல்லாம் மக்களுடன் போராட்ட களத்தில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறேன். மக்களின் அடிப்படை பிரச்சனைகளான குடிநீர், சாலை வசதிகளை, உடனடியாக நகர உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.
மேலும், திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது. சென்ற முறையைவிடவே அதிக கூட்டணி கட்சிகள் உள்ளதால் 25 சீட்டுகளுக்கு ஒப்புக்கொண்டோம், மேலும் குறைந்த தொகுதிகளாக இருந்தாலும் அனைத்து தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்று தெரிவித்தார்.