எஸ்.பி.வேலுமணி ஊழல் துறை அமைச்சர் - கோவை தங்கம் விமர்சனம்!

கோவை: வால்பாறை தொகுதி தனக்கு கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் எனவும் எஸ்.பி.வேலுமணி ஊழல் துறை அமைச்சர் என்றும் கோவை தங்கம் விமர்சனம் செய்துள்ளார்.


கோவை: வால்பாறை தொகுதி தனக்கு கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் எனவும் எஸ்.பி.வேலுமணி ஊழல் துறை அமைச்சர் என்றும் கோவை தங்கம் விமர்சனம் செய்துள்ளார்.

வால்பாறை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்படாத நிலையில், அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கம் கோவை மத்திய ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டல் ஆர்ஹெச்ஆர்- ல் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா, வால்பாறை சட்டமன்ற தொகுதியை பெறவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அமுல் கந்தசாமி போட்டியிடுவார் என அதிமுக அறிவித்தது.



இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கோவை தங்கம், தனக்கு வால்பாறை தொகுதி கொடுக்கப்படாமல் போனதற்கு எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று குற்றம்சாட்டினார். மேலும், அதுமட்டுமல்லாமல் எஸ்.பி. வேலுமணியை ஊழல் துறை அமைச்சர் என்றும் விமர்சித்தார்.

இதனிடையே, சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு? வால்பாறை மக்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார்.

முக்கியமாக, தமிழ் மாநில காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கோவை தங்கம் உறுதிபட அறிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...