கோவை; ஈரோட்டில் ஈமூ கோழி திட்டத்தில் ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்ட, செந்தில் நாதன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கோவை; ஈரோட்டில் ஈமூ கோழி திட்டத்தில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்ட செந்தில் நாதன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, மேட்டுப்புதுாரை சேர்ந்த செந்தில் நாதன்,(52,) தான் நடத்தி வந்த அம்மன் ஈமு கோழி நிதி நிறுவனம் வாயிலாக அதிக வட்டி தருவதாக வாக்குறுதி அளித்து 129 பேரிடம் ரூ.4.34 கோடி பெற்று, பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் செந்தில்நாதனை, 2016-ல் கைது செய்து சிறையிலடைத்தனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர், விசாரணையின் போது, கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால், 2016ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருப்பதால், கோவை டான்பிட் கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட செந்தில் நாதனை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நேற்று உத்தரவிட்டது. செந்தில் நாதன் குறித்த தகவல் தெரிந்தவர்கள், ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாருக்கு 0424 2256700, 94981 78566 ஆகிய தொலைபேசி எண்களுக்கு, தகவல் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.