மாணவர்கள் பைக்கில் வர அனுமதிக்கக் கூடாது; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

கோவை; மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.


கோவை; மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது;

பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் லைசென்ஸ் இன்றி வாகனங்களை இயக்குவது விதிமீறலாகும். ஆர்வக்கோளாறில் பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்குவதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் பள்ளி தொடங்கும் முன்பு, அதிவேகமாக வாகனங்களில் வரும் மாணவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாணவர்கள், பெற்றோர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டை மீறி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் கொண்டுவந்தால் அதை பள்ளி நிர்வாகமும் மற்றும் தலைமை ஆசிரியர்களும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கல்விதுறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...