கோவை; கோவையில் நேற்று டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கோவை மலுமிச்சம்பட்டி இரண்டாவது வீதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (37), தனியார் நிறுவன ஊழியர். மலுமிச்சம்பட்டியிலிருந்துசெட்டிபாளையம் நோக்கி நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, காரின் மீது பலமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் சிக்கிக் கொண்ட ஆனந்தகுமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். நிகழ்விடத்துக்கு அருகில் இருந்தோர் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.