கோவை விமான நிலையத்துக்குள் சுவர் ஏறி குதித்தவர் கைது

கோவை; கோவை விமானநிலையத்துக்குள் சுவர் ஏறிக் குதித்தவர் கைது செய்யப்பட்டார்.


கோவை; கோவை விமானநிலையத்துக்குள் சுவர் ஏறிக் குதித்தவர் கைது செய்யப்பட்டார்.

கோவை விமான நிலையம் எப்பொழுதுமே பரபரப்பாக காணப்படும். விமான நிலையத்துக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஒருவர் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே குதித்திருக்கிறார். அப்போது அங்கு பாதுகாப்புக்குநின்றிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் அவரை வளைத்துப் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த முகமது சதாம் (29) என்பது தெரியவந்தது. சித்ரா பகுதியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வரும் அவர் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். 15 நாட்களுக்கு முன்னர்தான் கோவை வந்தார். இந்நிலையில் இயற்கை உபாதையை கழிக்க நேற்று இரவு விமான நிலையம் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற அவர் தண்ணீர் தேடி விமான நிலைய வளாகத்துக்குள் குறித்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...