உதகை; தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறிப்பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகையில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சுரேஷ் பாபு உறுதி தெரிவித்துள்ளார்.

உதகை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் சுரேஷ் பாபு போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று அவர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், கோட்டாச்சியருமான மோனிகா ராணா சர்மாவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பாபு கூறியதாவது; “நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான விவசாய தொழிலான தேயிலை மற்றும் மலை தோட்ட காய்கறி விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் அவற்றுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.” இவ்வாறு சுரேஷ் பாபு கூறினார்.