கோவை; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காத அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை தாங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, அங்கிருந்த பயணிகளிடம் முகக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

கோவை மாநகராட்சி ஆணையரும் முகக் கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 80 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்று குறைந்த பின்னர் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் மக்கள் அலட்சியம் காட்டியதால் மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்திருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது கட்டாயமாகப் பின்பற்றப்படவேண்டும்.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். உணவு விடுதிகள், நிறுவனங்கள், நகைக்கடைகள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, உடல் வெப்பத்தைக் கண்காணிப்பது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
முகக் கவசமின்றி வெளியே நடமாடுபவர்களுக்கு ரூ100 -ரூ 200 வரை அபராதம் விதிக்கப்படும். அரசு அறிவுறுத்திய கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுவதை அனைவரும் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தேர்தலை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அரசியல் கட்சிகள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்களைப் பின்பற்றவேண்டும். இதனை மீறும் கட்சிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறினார்.