கோவை; நவக்கரை அருகே ரயில் மோதி யானை படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை; நவக்கரை அருகே ரயில் மோதி யானை படுகாயம்அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்த ஆண் காட்டு யானைக்கு சாடிவயல் கும்கி யானை முகாமில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் இடுப்பு மற்றும் பின் கால்களில் அசைவுகள் இல்லாததால், சுடு நீர் மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது.
கால்நடை மருத்துவக் குழுவினர் ஆலோசனைக்குப் பின்னர் படுகாயமடைந்த யானையை சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருட்டான சூழல் ஏற்படுத்தப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. எக்ஸ்ரே முடிவு வெளியான பின்னரே யானைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா, தசையில் பிரச்சனையா?என்பது குறித்து தெரியவரும் என்றும், அதன்பின்னர்தான் உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கால்நடை மருத்துவர்கள் கூறினர்.
கோவை அருகே அடிக்கடி ரயிலில் சிக்கி யானைகள் படுகாயம் அடைந்து வருவது விலங்கின ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.