கோவை: கோவையில் பயணி தவற விட்ட தங்க சங்கலியை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை: கோவையில் பயணி தவற விட்ட தங்க சங்கலியை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்தருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆட்டோ ஓட்டுநராக இருந்து கொண்டு, மதுக்கரை பகுதியில் ஊர்க்காவல் படையிலும் பணிபுரிந்து வருகிறார்.
இன்றுஅதிகாலையில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் 3 பயணிகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்லும் இடங்களில் இறக்கி விட்டார். அனைத்துப் பயணிகளையும் இறக்கிவிட்டபின்னர் ஓய்வெடுக்க ஆட்டோவில் உட்கார்ந்தபோது இரண்டரை பவுன் தங்கச்சங்கிலி (கிறிஸ்தவ மத அடையாளத்துடன்) இருந்ததைப் பார்த்தார். தன்னுடைய ஆட்டோவில் பயணித்தவர்களில் ஒருவர் தவற விட்டிருக்கலாம் என்று அறிந்தார். பின்னர் அந்த தங்க சங்கிலியை காவல்துறையில் ஒப்படைத்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ் ஆட்டோவில் பயணித்த செட்டிவீதியைச் சேர்ந்த ராணி பிரிசில்லா என்பவர்தான் தங்க சங்கலியை தவற விட்டது என தெரியவந்தது. உரிய விசாரணைக்குப் பிறகு தங்க சங்கிலியை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, ராணி பிரிசில்லாவிடம் ஒப்படைத்தார். மேற்படி ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ரமேஷின்நற்செயலைப்பாராட்டி அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கினார்.பல்வேறு தரப்பினரும் ரமேஷை பாராட்டி வருகின்றனர்.