கோவை: வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கிப் பணிகள் முடங்கின. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்ததுடன், ரூ. 450 கோடிக்கு பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
கோவை: வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக கோவை மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கிப் பணிகள் முடங்கின.ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் தவித்ததுடன், ரூ. 450 கோடிக்கு பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து இரண்டாவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.இதனால்
ரூ.450 கோடி அளவுக்கு இரண்டாவது நாளாக பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். கோவையில் பெரும்பாலான ஏ.டி.எம்-களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது ஏமாந்தது பரிதாபமாக இருந்தது. வங்கி வாயிலாக நடைபெறும் பணிகள் அனைத்தும் முடங்கியதால் தொழில்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
வேலை நிறுத்தம் குறித்து வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியதாவது;
"இந்தியாவில் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் தற்போது 12 க்கும் குறைவாகவே உள்ளன. இதில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் இருக்கும் வரைதான் இட ஒதுக்கீட்டின் கீழ் ஏழை எளிய மாணவர்கள் வங்கிப் பணிகளில் சேரமுடியும், அதே போல் விவசாயிகள், சிறு, குறு தொழில் முனைவோர் ஆகியோர் குறைந்த வட்டியில் கடன் பெறமுடியும். பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் இவை அனைத்தும் பாதிக்கப்படும். எனவே தான் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம். மத்திய அரசு முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால். தொடர் போராட்டங்கள் நடைபெறும்."
இவ்வாறு வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூறினர்.