மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆதரவு திரட்டினார்!

கோவை: கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆதரவு திரட்டினார்.



கோவை: கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய பகுதிகளில் நிர்வாகிகளை சந்தித்து திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆதரவு திரட்டினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் கிராமம் கிராமமாகச் சென்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.



அதன் ஒரு பகுதியாக, இன்று கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மதுக்கரை மத்திய ஒன்றியம் பகுதியிலுள்ள ஒத்தக்கால் மண்டபம், பிரிமியர் மில்ஸ், மயிலேரிபாளையம், சீரபாளையம், போடிபாளையம், மாச்ச நாயக்கன்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதியில் உள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறித்து பிரபாகரன் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.



மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்த திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், வெற்றி பெற்றவுடன் பொதுமக்களின் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார்.



இந்த நிகழ்வின் போது, மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர் E.B. ராஜேந்திரன், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அட்சய நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...