பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி; வாகனங்களை முழுமையாக சோதனையிட அனுமதி

கோவை; சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனங்களை முழுமையாகச் சோதனையிடப் பறக்கும்படையினருக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கோவை; சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனங்களை முழுமையாகச் சோதனையிடப் பறக்கும்படையினருக்குத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள்தரப்படுவதைத் தடுக்க பறக்கும்படையினர் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட லட்சகணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நகைகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் வாகனங்களை முழுமையாக சோதனை இடுவதற்கான அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நேற்று முதல் வாகனங்களில் முழு அளவில் சோதனை நடத்த, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட், கதவு உள்ளிட்ட பகுதிகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறதா என போலீசார் சோதனையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றனர். போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பறக்கும் படைகளில் உள்ளதால், அவர்களும் வாகனங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே வரும் நாட்களில் மேலும் லட்சகணக்கான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்படலாம் என்று தெரிகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...