கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் - தேர்தல் அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி துவங்கியது. கோவையில் முதல் நாளில் 2 பேர் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 13 மற்றும் 14 ஆகிய தேதிகள் விடுமுறை என்பதால் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், தொடர்ந்து நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் மொத்தம் 31 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

இது குறித்து தேர்தல் அதிகாரி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதியில் நேற்று 3 பேரும், சூலூர் தொகுதியில் 3 பேரும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 5 பேரும், கோவை வடக்கு தொகுதியில் 5 பேரும், தொண்டாமுத்தூர் தொகுதியில் 4 பேரும், கோவை தெற்கு தொகுதியில் 3 பேரும், சிங்காநல்லூர் தொகுதியில் 7 பேரும், பொள்ளாச்சியில் ஒருவரும் என மொத்தம் 31 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

மேலும், வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. முதல் நாள் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் 2 பேரையும் சேர்த்து இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 33 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...