கோவை: அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கைக்கூலியாக கோவை மாநகர காவல்துறை மாறியுள்ளதாக, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இன்று ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை: அமைச்சர் எஸ்பி வேலுமணியின் கைக்கூலியாக கோவை மாநகர காவல்துறை மாறியுள்ளதாக, தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இன்று ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலமாக குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் அறிவித்துள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அதேபோல, அதிமுக சார்பில் எஸ் பி வேலுமணி போட்டியிடுகின்றார்.
இந்நிலையில், இன்று திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கோவை குனியமுத்தூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது, பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் என்ற பெயரில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினர் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, காவல் துறையினரை கேள்வி கேட்ட கார்த்திகேய சிவசேனாபதி, காவல்துறையினர் வேண்டுமென்றே பிரசாரத்துக்கு மிகுந்த இடையூறாக உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, அவர் காவல் துறையிடம், "காவல்துறை எஸ் பி வேலுமணியின் ஏவல் துறை" என்று சாடினார்.
தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும், காவல்துறையினர் பிரச்சாரத்தின் போது, தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் குனியமுத்தூர் முக்கிய சாலையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.