வெள்ளலூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து - மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த வாரம் ஏற்கனவே இந்த குப்பைக்கிடங்கில் தீ பிடித்தது. 8 மணி நேரமாக போராடி 30 ஏக்கர் பரப்பில் எரிந்த தீயை அணைத்தனர். மீண்டும் குப்பைக்கிடங்கில் தீ பரவியது. விரைவாக தெரிந்ததால் தீயணைப்பு துறையினர் பல இடங்களில் பரவாமல் அணைத்தனர்.

குப்பை குவியலில் சாம்பல் கழிவுகளில் இருந்த அணையாமல் இருந்த கரித்துண்டு, தூக்கி வீசப்பட்ட தீ பெட்டிகளில் இருந்த தீக்குச்சிகள் மூலமாக தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தீயை அணைக்க, குப்பை கிடங்கு வளாகத்தில் தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் நிறுத்தி வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைக்கிடங்கு அடிக்கடி தீ பிடிப்பதால் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக தெரிகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும். தீ பிடிக்கும் பொருட்களுடன் குப்பைகளை கிடங்கில் கொட்ட அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...