கோவையில் காலை வாக்கிங், ஜாக்கிங், உடல் பயிற்சி; மக்களிடம் நலம் விசாரித்த கமல்..!

கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.



கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

இன்று காலை, அவர் வழக்கம் போல் எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டு, உடற்பயிற்சி செய்து பொதுமக்களுடன் உரையாடினார். கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரத்தில் உள்ள சாண்டோ சின்னப்ப தேவர் நினைவு தேகப்பயிற்சி சாலையில் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக வேட்பாளராக களம் இறங்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தான் போட்டியிட உள்ள கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யவும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் நேற்று மதியம் சென்னையில் இருந்து கோவை வந்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த கமல்ஹாசன், தொடர்ந்து ராஜ வீதி தேர்நிலை திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.



Photo by Jeeva Nanthan

இன்று காலை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ள கமல்ஹாசன், இன்று அதிகாலையில் பந்தய சாலை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.



தொடர்ந்து, ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு தேகப்பயிற்சி சாலைக்கு சென்ற அவர், அங்கு சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர், சாலையோரம் உள்ள டீக்கடை ஒன்றின் அருகே நின்று அங்கிருந்தவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார். பின்னர், உக்கடம் மீன் சந்தைக்கு சென்ற கமல்ஹாசன் அங்கிருந்த வியாபாரிகளிடமும் சிறிது நேரம் உரையாடினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...