கோவை: சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்க கோவை கிணத்துக்கடவு பகுதியில் மண்பானைகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து மழை பெய்து வந்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், தற்போது சுட்டெரிக்கும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது
இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் மண்பாண்டத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்த மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்த விதவிதமான மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை மண்பானைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலை சாமளிக்க என்னதான் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராத நிலையில், பாரம்பரியமான மண்பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து குடித்தாலே சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தாகத்தைத் தீர்க்க முடியும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அனைவரது வீட்டிலும் பிரிட்ஜ் போன்ற குளிர் சாதன பொருட்கள் இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரிக்கும் மண்பானையும் விற்பனை சிறிது மந்தமாக இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.