கொங்கு மண்டலத்தின்‌ வளங்களை மீட்டெடுக்கப் பாடுபடுவேன்: கமல்ஹாசன்

கோவை: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலத்தின் வளங்களை மீட்டெடுக்கப் பாடுபட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உறுதிபடத் தெரிவித்தார்.


கோவை: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கொங்கு மண்டலத்தின் வளங்களை மீட்டெடுக்கப் பாடுபட உள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உறுதிபடத் தெரிவித்தார்.



கோவை டவுன்ஹாலை அடுத்த ராஜவீதி தேர்முட்டி பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.



அதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், துணைத் தலைவர்கள் ஆர். மகேந்திரன், வி.பொன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர்‌ கே.எம்.ஷெரிப் உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் கமல்ஹாசன் பேசியதாவது;



“மக்கள் சேவைதான்‌ அரசியல், அதில் நாங்கள் 40 வருடம் பயணித்துள்ளோம், தேர்தல் முடிந்ததும் நடிக்கப் போய்‌விடுவேன்‌ என்று கூறுகிறார்கள். நடிப்பு எனது தொழில், அரசியல் எனது கடமை. ஏன் கோவையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கேட்கிறார்கள், என்னை வெற்றி பெற‌ச் செய்யுங்கள். ஐந்து வருடங்களுக்கு பிறகு, ஏன்‌ கோவையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என கேட்கவே மாட்டீர்கள், அந்த அளவிற்கு கோவை தெற்கு தொகுதியை முன்னேற்றி காட்டுவேன். மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், படித்தவர்களும் இருக்கிறார்கள், மக்களுக்குச் சேவை செய்யவே இவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார்கள்

பதவியை அடைவது எங்கள் இலக்கு இல்லை. தமிழகத்தை சீரமைப்பது தான் எனது இலக்கு. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடந்த சீரழிவுகளை ஐந்து ஆண்டுகளில் சரி செய்ய முடியாது, அடுத்த தேர்தலையும்‌ கணக்கில் கொண்டே பேசுகிறேன். கொங்கு மண்டலத்தின்‌ வளங்களை மீட்டெடுக்கப் பாடுபடுவேன். சினிமாவில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியதைப் போலவே கோவை தெற்கு தொகுதியிலும் மாற்றங்களை ‌நிகழ்த்திக் காட்டுவேன்.”

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...