அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொத்து மதிப்பு ரூ.3 கோடி: வேட்பு மனுவில் தகவல்

கோவை: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துமதிப்பு ரூ.3 கோடி என அவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவின் வாயிலாக தெரியவந்துள்ளது.


கோவை: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்துமதிப்பு ரூ.3 கோடி என அவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவின் வாயிலாக தெரியவந்துள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும்அ.தி.மு.க வேட்பாளரான அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவோடு இணைத்துள்ள அபிடவிட்டில் கூறப்படிருப்பதாவது;

"கடந்த ஆண்டில் சுமார் ரூ.11 லட்சத்துக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளேன். என் மனைவி 2020ம் ஆண்டில் 9 லட்ச ரூபாய்க்கு வருமானம் என கணக்கு தாக்கல் செய்துள்ளார். 2019ம் ஆண்டில் 70.79 லட்ச ரூபாய்க்கும், 2018ம் ஆண்டில் 8 லட்ச ரூபாய்க்கும் வருமான வரி தாக்கல் செய்துள்ளேன்.

என்னுடைய பெயரில் 80 கிராம் தங்கம், மனைவி பெயரில் 1360 கிராம் தங்கம், மகள் சாரங்கி பெயரில் 2,030 கிராம் தங்கம், மகன் பெயரில் 56 கிராம் தங்கம் இருக்கிறது. மகள் பெயரில் உள்ள தங்கத்தின் மதிப்பு 81 லட்சம், மனைவி பெயரில் உள்ள தங்கத்தின் மதிப்பு 51 லட்ச ரூபாய். என்னுடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.3.03 கோடி, மனைவி பெயரில் உள்ள சொத்துகள் மதிப்பு ரூ.29.26 லட்சம்"

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது வேட்புமனுவின் அபிடவிட்டில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...