கோவை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், கோவை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ரூபாய் 4 லட்சத்தை ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த நபரிடம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பணம் எடுத்து வந்தவர் சங்கனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு கோவை வடக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.
உரிய ஆவணங்கள் காண்பித்து பணத்தை திரும்பி பெற்று கொள்ளுமாறு சக்திவேலிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.