கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கோவை; கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து, நோயில் இருந்து பாதுகாக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.


கோவை: கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை அடுத்து, நோயில் இருந்து பாதுகாக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பேருந்து நிலையம்‌, கிராஸகட்‌ சாலை, 8, 9 மற்றும்‌ 10வது வீதிகள்‌, 100 அடி சாலை, டாடாபாத்‌ ஆகிய பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ‌கோவை மாநகராட்சி ஆணையர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ஆய்வு மேற்கொண்டார். ஜவுளிக்கடைகள்‌, வணிக நிறுவனங்கள்‌, சிற்றுண்டிகள்‌, உணவகங்கள்‌, தேநீர் கடைகள்‌ உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கொரோனா தொற்று முன்னெச்செரிக்கைகளை பின்பற்றுகின்றனரா என்றும் ஆய்வு செய்தார். ‌கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, அடிக்கடி கைகளைக்கழுவியும்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா நோய்‌ தொற்றை முற்றிலும்‌ தடுக்க மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்‌ எனவும் பொதுமக்களிடம் அவர்‌ கேட்டுக்கொண்டார்‌.



முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த பேருந்துகளின்‌ ஓட்டுநர்கள் நான்கு பேர் மற்றும்‌ நடத்துநர்களிடம் இருந்து தலா ரூ.500ம்‌, பொதுமக்கள் 15பேரிடம் இருந்து தலா ரூ.100ம்‌ அபராதமாக வசூலிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து காந்திபுரத்தில்‌ சிடிஎம்‌.ஹோம்‌ நகாபுற ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கொரோனா தடுப்பூசி போடப்படும்‌ மையத்தையும் அவர் பார்வையிட்டார்‌.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...