பொள்ளாச்சி; சமூக வலைதளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு பரப்புவதாக திமுகவினர் மீது போலீசார் பொய்யான வழக்குகள் பதிவு செய்வதாக கூறி சார் ஆட்சியரிடம் திமுகவினர் மனு அளித்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகக்கூறி பொள்ளாச்சியில் திமுகவினர் 4 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் மேலும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து திமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்தி வருவதாகக்கூறி கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், "தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் தூண்டுதலின் பேரில் செயல்பட்டுவரும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.