உதகை: உதகை உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் விவரம் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கபட்டுள்ளன. அதில் 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடபட்டது. ஆனால் உதகை, தளி, விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி அவசர அவசராமாக சிக்மங்களூருவிலிருந்து உதகைக்கு இன்று மதியம் 2 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதனை தொடர்ந்து சி.டி.ரவி, உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், உதகை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருந்த 20-க்கும் மேற்பட்டோர்களிடம்நேர்காணல் நடத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி கூறியதாவது;
“உதகை உள்ளிட்ட 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் நாளை வெளியிடபடும். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுகவுக்கு குழப்பம் இருக்கிறது. அதனை பாஜக தெளிவுபடுத்தும். சிஏஏ சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை” இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.