குன்னூர்; குன்னூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இளிதுரை கா.ராமச்சந்திரன், சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திமுக சார்பில் குன்னூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இளித்துரை கா. ராமச்சந்திரன், லாலி அரசு மருத்துவமனை அருகில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புடை சூழ செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக வந்தார். பின்னர், குன்னூர் சார் ஆட்சியர் ரஞ்ஜித் சிங்கிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நீலகிரி மாவட்ட திமுக செயலாளர்பா.மு. முபாரக், குன்னூர் நகரச் செயலாளர் எம். ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.