வால்பாறை: தமிழக-கேரள எல்லையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5.40 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வால்பாறை: தமிழக-கேரள எல்லையில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5.40 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக-கேரளா எல்லையில் உள்ள சோலையார் அணை சோதனை சாவடியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று மதியம் கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து வால்பாறைக்கு வந்த கார் ஒன்று சோதனையிடப்பட்டது. காரில் வைக்கப்பட்டிருந்த பைகளில் ரூ.5,40,000 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த பறக்கும் படையினர், காரில் வந்த அப்துல் காதரிடம் விசாரணை மேற்கொண்டனர். நகை வியாபாரியான அவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.5,40,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
கொரோனா சோதனை
மேலும், சோலையார் அணை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க எல்லையோர பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.