கோவை தொண்டாமுத்தூர் தொகுதி: திமுக-அதிமுக தொண்டர்களிடையே தள்ளு முள்ளு..!

கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியை எதிர்த்து போட்டிட உள்ளதால் அந்த தொகுதியில், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரும் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணியை எதிர்த்து போட்டிட உள்ளதால் அந்த தொகுதியில், திமுக மற்றும் அதிமுக என இரு கட்சியினரும் தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாதிபதியுடன் திமுக நிர்வாகிகள் இன்று பேரூர் பட்டீஸ்வரர் அருகே ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதனிடையே, அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அவ்வழியாக வரவிருந்ததால், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக கட்சியினர் அவரை வரவேற்க பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன் ஏராளமானவர்கள் காத்திருந்தனர்.



இதனிடையே, அமைச்சர் அங்கு வருவதற்கு முன், கார்த்திகேய சிவசேனாதிபதி வெளியே காரில் சென்ற போது, அதிமுக தொண்டர்களும், திமுக தொண்டர்களும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர்.



இதனையடுத்து, இரு கட்சி தொண்டர்களிடையே தள்ளு முள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது.

திமுக பேரூர் கழகச் செயலாளர் ப.அண்ணாதுரை, தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் க.மோகன், கழக நிர்வாகிகள் நாராயணசாமி, முனியப்பன், ஞானவேல், சண்முகநாதன், காளிமுத்து, விஜய் பாலாஜி, சரவணகுமார் மற்றும் கழக நிர்வாகிகள், இதனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே, அமைச்சர் அருகில் வருவதாக தகவல் வந்ததை அடுத்து இருதரப்பினரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...