கோவை: அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை என்று வானதி சீனிவாசன் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை: அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை என்று வானதி சீனிவாசன் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியை மாநிலத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுவேன் எனவும் மெட்ரோ ரயில், சாலை விரிவாக்கம், விமானநிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாமல் உள்ள திட்டங்கள் செயல்படுத்த முயற்சிப்பேன் என்றார்.
தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் கமல்ஹாசன் பிக்பாஸில் நடிக்க சென்றுவிடுவார் என்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியிருப்பதற்கு, ஒரு டாக்டர் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் டாக்டர் பணியை தொடர்வது போன்றுதான் இதுவும், அரசியல் அல்லாமல் வேறு தொழில்கள் எங்களுக்கு இருக்கிறது, அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல, கடமை என்று பதிலளித்தார்.