கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தொண்டர்களின் ஆரவாரத்துடன் சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மையம் துணை தலைவரும் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான மகேந்திரன் தேர்தல் அலுவலரிடம் சி ராம்குமார் இடம் வேட்புமனு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் சிங்காநல்லூர் தொகுதி மக்களிடம் உரையாற்றிய மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன், தமிழக மக்கள் மாற்றத்துக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு, கோவை மக்கள் முன்னோடியாக இருப்பார்கள் என்றார்.
தேர்தலுக்கு முன்னதாகவே, அறிக்கைகள் மற்றும் போலி வாக்குறுதிகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க ஆளும் கட்சி முயற்சிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
பின்னர், மக்கள் மிகுந்த அன்பு செலுத்தியமைக்கு நன்றி தெரிவித்த அவர், சிங்காநல்லூர் தொகுதியில் தனது வெற்றிக்காக பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.
மேலும், கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட மநீம வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் மேற்கு மண்டலத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று, மேற்கு மண்டலத்தை மக்கள் நீதி மய்யத்தின் கோட்டையாக மாற்றுவோம் என்று கூறினார்.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விரைவில் கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார், மேலும், தனது பிரச்சாரத்தை ராஜா வீதியில் உள்ள தெர்மூட்டியிலிருந்து தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.