கோவை: மேற்கு மண்டலத்தில் கடந்த இரண்டு வாரத்தில் கஞ்சா வழக்குகளில் 39 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேற்கு மண்டல காவல் துறைக்கு உட்பட்ட கோவை சரகத்தில் கடந்த 15 நாட்களில் 23 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரத்து 950 மதிப்பிலான 62 கிலோ கஞ்சா மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 95 வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா ரூபாய் 2 லட்சத்து 60 ஆயிரத்து 500 பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, சேலம் சரகத்தில் கடந்த 15 நாட்களில் 6 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பிலான 19 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக மேற்கு மண்டலத்தில் 29 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 39 நபர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 7 லட்சத்து 27 ஆயிரத்து 350 மதிப்பிலான 81 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை சரகத்தில் கடந்த 3 நாட்களில் சட்டவிரோதமாக டாஸ்மார்க் பாரில் மது விற்பனை செய்தது தொடர்பாக 260 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 260 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 64 ஆயிரத்து 365 மதிப்பிலான 3 ஆயிரத்து 77 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சேலம் சரகத்தில் 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 276 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ரூபாய் 3 லட்சத்து 47 ஆயிரத்து 990 மதிப்பிலான 3,462 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மொத்தமாக மேற்கு மண்டலத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக 536 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 536 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்து ரூபாய் 7 லட்சத்து 12 ஆயிரத்து 355 மதிப்பிலான 1,539 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.