கோவை: ஐ.டி.பி.ஐ வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படுவதை கண்டித்து கோவையில் அனைத்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் துவங்கியது.

கோவை இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்திய முன்பு, மத்திய அரசின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஐ.டி.பி.ஐ வங்கி மற்றும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார்மயம் ஆக்கப்படுவதை கண்டித்து கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வங்கித் துறையில் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிறைப்ப வேண்டும் என்றும், வங்கிகளில் பெருகிவரும் வராக்கடன்களை வசூலிக்க கோரியும், கடனை திருப்பி செலுத்தாதோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.மீனாட்சி சுப்பிரமணியம் தெரிவித்தார்.