கோவையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதி விபத்து - உயிருக்குப் போராடி வரும் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை!

கோவை: கோவை மதுக்கரை அருகே இன்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை: கோவை மதுக்கரை அருகே இன்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது ரயில் மோதியதில் படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்துள்ள சின்னாம்பதி, நவக்கரை மலை கிராமங்கள் உள்ளது. இங்கு உள்ள யானைகள் அருகே உள்ள வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் ரயில்வே தண்டவாளங்களை கடந்து நீர் அருந்த செல்லும்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணி அளவில் யானை கூட்டம் ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மீது மோதியது.



இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த யானை அங்கேயே படுத்து உள்ளது.

பின்னர், இது குறித்து ரயில் ஓட்டுனர் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் மதுக்கரை வனச்சரகர் சீனிவாசன் அடங்கிய வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையின் உடல் நிலை குறித்து கண்டறிந்தனர்.

இதை தொடர்ந்து கால்நடை மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் காயம் ஏற்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வனத்துறையின் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து வந்த திருவனந்தபுரம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய யானை காயமடைந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காயம்பட்ட யானைக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ரயில்கள், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் வனப்பகுதி வழியாக மெதுவாகச் செல்ல வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வரும் நிலையில் ரயில் ஓட்டுனர்கள் அதை கண்டுகொள்ளாமல் வனப்பகுதி வழியாக வேகமாக வரும் போது இவ்வாறு யானைகள் அடிபடுவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து வருவதாகவும் இது குறித்து வனத்துறையினர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ரயில்களின் வேகத்தைக் குரைத்து மெதுவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து ரயிலில் யானை அடிபட்டு உயிர் இழக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...