அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல், கொள்ளை குறித்த புகார்களை மின்னஞ்சலில் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் - கார்த்திகேய சிவசேனாபதி, திமுக வேட்பாளர்

கோவை: அமைச்சர் வேலுமணியின் ஊழல், கொள்ளை மற்றும் அராஜகங்கள் குறித்த புகார்களை [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.


கோவை: உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் ஊழல், கொள்ளை மற்றும் அராஜகங்கள் குறித்த புகார்களை [email protected] என்ற மின்னஞ்சலில் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் SP வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், எதிர் வேட்பாளர் SP வேலுமணி அவர்கள் பற்றிய புகார்களை தங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ள தலைவர் அவர்களுக்கும், கழக தலைமைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அதிக ஊழல் செய்த அமைச்சரின் தொகுதியில் அவரை எதிர்த்து தலைவரின் உத்தரவின் பேரில் தொண்டாமுத்தூர் தொகுதியின் மாவட்ட, மாநகர செயலாளர்கள் முதல் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், சிற்றூர், ஊராட்சி மற்றும் வார்டு செயலாளர்கள் வரையுள்ள அனைத்து நிர்வாகிகளின் ஒத்துழைப்போடும் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவது முக்கியமானது.

குறிப்பாக, அதிமுக அமைச்சராக இருந்த SP வேலுமணியின் ஊழல்களும், அராஜகங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடித்து மக்களை ஏமாற்றி வருகிறார். இவரின் பினாமிகள் சொத்து உயரவும் தன்னுடைய சொத்து மதிப்பைக் கூட்டிக்கொள்ளவும் மட்டுமே இவர் அமைச்சராக இருந்துள்ளார்.

அதேபோல, தொகுதிக்குள்ளும் தனது அராஜகத்தால் மக்களை மிரட்டுவது, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொள்ளையடிப்பது, ஏதேனும் உள்ளூர் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுக் காவல் நிலையம் செல்வோரை மிரட்டி அவர்களின் மேல் கொலை முயற்சி செய்வது போன்ற பல ரவுடித்தனங்களை செய்து வருகிறார். கூடுதலாகப் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இவருக்கு நெருக்கமானவர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் இவரால் தொண்டாமுத்தூர் மக்கள் மிகுந்த தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

மேலும், தமிழகம் முழுவதும் அதிமுக அமைச்சர்களால் அடிக்கப்பட்ட கொள்ளைகளை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு உரிய விசாரணையின் மூலம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலைவர் நமது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

எனவே, அவர் தொடர்பான புகார்களைத் தகுந்த ஆதாரங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். கழக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த நூறு நாட்களில் உங்கள் புகார் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டு SP வேலுமணி அவர்களின் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புகார் அளிப்பவர்களின் விவரம் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்." இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...